நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் ஊராட்சி கடைத்தெருவில் அரசு மதுபானக்கடை உள்ளது. இதனால் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அரசு மதுபான கடையை உடனடியாக இடமாற்றம் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வெள்ளப்பள்ளம்