நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி-புதுக்கடை இடையே வீரமுட்டி வடிகால் வாய்க்கால் குறுக்கே நடைபாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தை சுற்றுவட்டார கிராம மக்கள் இதன் வழியாக சென்று வருகின்றனர்.பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்,அரசு ஊழியர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் இந்தப் பாலம் வழியாக திருச்செங்காட்டங்குடி,அண்ணாமண்டபம் வந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் பாலத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்