திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி அந்த பகுதியே அசுத்தமாக மாறி வருகிறது. இதனால் நோய்பரவும் அபாயம் உள்ளதால், நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் புதிய கழிவுநீர் காலவாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.