திட்டச்சேரி-தேவன்குடி இடையே ஆற்றங்கரை இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்தது. இதனை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை வெட்டி அகற்றினர். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.
பொதுமக்கள், திட்டச்சேரி