திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சோத்துப்பாக்கம் செல்லும் சாலையில் புதியதாக கட்டி திறக்கப்பட்டுள்ள துணைப் பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை ஆபத்தாக காட்சி தருகிறது. இந்த சாலையானது புதர்கள் ஆக்கிரமித்தும், சாலையில் கற்கள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. எனவே சூழ்ந்துள்ள முட்செடிகளை அகற்றியும், சாலையை சரி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.