திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு ஊராட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரசு இ- சேவை மையம் கடந்த ஒரு வருடமாக செயல்படாமல் மூடியே கிடக்கிறது. இ-சேவை மையத்தில் இருக்கக்கூடிய கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் பாழாகி வருகிறது. கட்டிடத்துக்குள் தேவையற்ற பொருட்களை போடப்பட்டு குடோன் போல காட்சிதருகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இ-சேவை மையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.