சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீர்

Update: 2022-08-11 15:17 GMT
பெங்களூரு கப்பன் பூங்கா அருகே உள்ள சிக்னல் பகுதியின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் உள்ள கழிவுநீர் வடிகால் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி அந்த சாலையில் ஆறுபோல் வழிந்தோடுகிறது. அந்த கழிவுநீர் கப்பன் பூங்கா நுழைவு வாயில் வரை சாலையின் ஓரம் ஓடுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுநீர் வடிகாலை சரிசெய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்