தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்,பழவத்தான் கட்டளை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரைக்கால் சாலை,விவேகானந்தா நகரில் கிளை நூலகம் ஒன்று பல வருடங்களாக செயல் பட்டு வருகிறது.இந்தக் கிளை நூலகக் கட்டிடம் பழமையானது என்பதால் சேதமடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகின்றது. இதனால் புத்தகங்கள் நனைக்கின்றன.மேலும்,வாசகர்கள் படிக்கும் இடத்தில் மழை நீர் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலக கட்டிடத்தை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பழவத்தான்கட்டளை.