சென்னை செனாய் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு மின்பெட்டி திறந்தநிலையில் வயர்கள் வெளியே தெரியும் வகையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. சிறுவர்கள் பெரியவர்கள் என அதிகமானோர் உள்ளதால், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் புதியதாக மின்பெட்டியின் மூடியை பொருத்தி பொதுமக்களின்பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.