சென்னை பெரியபாளையத்தம்மன் கோவில் 8-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தெருவில் உள்ள மின்பெட்டி துருபிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அடிக்கடி மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மிகுந்த பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் துருபிடித்த மின்பெட்டியை உடனடியாக மாற்றவேண்டும்.