சென்னை துரைப்பாக்கம் பாலமுருகன் கார்டன் பகுதியிலுள்ள வங்கி அருகே உள்ள சாலையின் நடுவில் இரும்பு குழாய் ஒன்று உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மேலும் இதுகுறித்த தடுப்புகளும், அறிவிப்பு பலகைகளும் சரிவர அமைக்கப்படவில்லை. எனவே அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்தவாறே இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விபத்துக்கள் ஏற்படுத்தும் இந்த இரும்பு குழாயை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.