சாலையில் கழிவுநீர்....

Update: 2025-08-03 11:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலை காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகுந்த துயரத்தை அடைகிறார்கள். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுவதால் மிகுந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கழிவுநீர் குழாயை சீரமைத்துதர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்