நகருமோ! நகரும் படிகட்டுகள்

Update: 2022-08-10 14:29 GMT

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ரெயில் நிலையத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த நகரும் படிக்கட்டுகள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் பெண்களும், முதியவர்களும் பெரும் சிரமத்துக்கு இடையே பயணித்து வருகிறார்கள். நகராமல் இருக்கும் நகரும் படிகட்டுகள் மீண்டும் நகருமா?

மேலும் செய்திகள்