வடபெரும்பாக்கம் விநாயகபுரத்தில் உள்ள மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக சிதிலமடைந்து கிடக்கிறது. மழை பெய்யும்போது பள்ளம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அதில் சிக்கி காயங்களுடன் செல்லவேண்டிய அவலம் ஏற்படுகிறது. உயிர்ப்பலி வாங்கும் முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்கவேண்டும்.