திருவள்ளூர் மாவட்டம் மூவரசம்பேட்டை அம்மன் நகர்-மடிப்பாக்கம் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் இதனால் சில சமயம் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.