திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பாலாஜி நகர் அருகே உள்ள நூலகம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது அதன் அருகே ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வைக்கும் குடோனாக நூலக கட்டிடத்தை மாற்றியுள்ளனர். அரசு வழங்கிய புத்தகங்கள் கட்டிடத்தினுள் ஒரு ஓரத்தில் போட்டு வைத்துள்ளனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நூலக கட்டிடம் துவக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தற்போதுள்ள நூலக கட்டிடம் உள்ளது. பழுதடைந்த நூலகம் புத்துயிர் பெறுமா?