கண்காணிப்பு காமிரா சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-10 14:18 GMT


திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மகா மாரியம்மன் கோவில், கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன . இந்தநிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி விட்டது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் அச்சத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு காமிராவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வலங்கை மான்.

மேலும் செய்திகள்