திருவாரூர் கடை வீதியில் அண்ணா சாலையின் ஒரு பகுதியில் நகைக்கடைகள் மற்றும் பூக்கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த பகுதி முழுவதும் குறுகலாக உள்ளது. மேலும் இரண்டு பக்கமும் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருப்பதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்.