திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஏராளமான நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. பொதுமக்களையும் விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேலும் சாலையில் நாய்கள் சுற்றித்திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்டுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கோட்டூர்.