தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் இருந்து உள்ளூர் வழியாக மோரி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் ஆகாயதாமரைகள் மற்றும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடக்கறது. மேலும் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாய்க்காலில்துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கும்பகோணம்.