தொலைபேசி கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-09 15:31 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கொண்டப்ப நாயக்கன் பாளையம் தெருவில் ஒரு தொலைபேசி கம்பம் உள்ளது. அதன் அடிப்பகுதி துருப்பிடித்து அரித்து விட்டது. இதனால் எந்த நேரமும் விழும் நிலையில் அந்த கம்பம் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் மின்சார வயர்கள் அருகில் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தொலைபேசி கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன்,பட்டுக்கோட்டை.

மேலும் செய்திகள்