பெங்களூருவில் சாந்திநகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்த பகுதியில் இருந்து லால்பாக் பூங்கா செல்லும் சாலையில் உள்ள நடைபாதையை அந்த பகுதியினர், மற்றும் வெளியூர்களுக்கு பஸ்சில் செல்ல வரும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் ஓட்டலில் உள்ள எச்சில் இலைகள், காய்கறி கழிவுளை வீசி சென்றுள்ளனர். அது மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதை அந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள் தின்றுவிட்டு, சாலையில் கிளறிவிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.