தண்ணீர் வருமா?

Update: 2022-08-08 16:36 GMT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழன்மாளிகை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலிலிருந்து அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் செல்லும். ஆற்றில் தண்ணீர் வந்து கடைமடைக்கு சென்ற ஒரு வாரத்தில் வாய்க்காலுக்கு தண்ணீர் வந்து விடும். ஆனால் தற்போது சோழன்மாளிகை வாய்காலுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள்,கும்பகோணம்.


மேலும் செய்திகள்