பொதுமக்களின் வேண்டுகோள்

Update: 2022-08-08 14:20 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, வெங்கம் பேட்டை கிராமத்தில் பள்ளிப்பட்டுவிலிருந்து புத்தூர் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மண் மூலம் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் பத்துக்கு மேல் கவிழ்ந்துள்ளன. ஆனால் உயிர் சேதம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. உயிர்சேதம் ஏற்படும் முன்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்