பெரியகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . தொடக்கப்பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், உயர்நிலைப் பள்ளியில் சுமார் 110 மாணவ மாணவிகளும் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுக்கு மதிய உணவு சத்துணவு திட்டம் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது . கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த சமையலறை கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சமையல் கட்டிடம் இன்னும் கட்டப்படாமலே இருக்கிறது .இதனால் திறந்த வெளியில் தான் சமையல் செய்யப்பட்டு வருகிறது. எனவே இரண்டு பள்ளிகளுக்கும் தனித்தனியாக சத்துணவு கூடம் அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.