திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சந்து தெரு, பெரிய தெரு, ஆறுமுக சாமி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் மோட்டார் பழுதாகி உள்ளதால், மூன்று நாட்களாக அப்பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. பழுதாகி உள்ள மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீரை உடனடியாக வழங்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .