திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் திரு.வி.க. நகர் சந்திப்பு, ஸ்ரீ பாலாஜி நகர் பள்ளகழனி பகுதியில் உள்ள சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீர் செய்யப்படாமல் உள்ளது. தற்போது இந்த சாலை சேரும் சகதியுமாக உள்ளது. மழைக்காலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் சறுக்கி சேற்றில் விழும் சம்பவங்களும் நிகழ்கிறது. சாலை சீர் செய்யப்படுமா?