திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 6-வது பிளாக் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் வடிகால்வாயின் நடுவில் இருக்கும் கம்பங்கள் அகற்றப்படாமல் தரமற்ற முறையில் ஜல்லி போட்டு கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன். மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பகுதியின் நடுவில் உள்ள கம்பங்களை முறையாக அகற்றிவிட்டு வடிகால்வாயை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.