திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகளிர் போலீஸ் நிலையம் அமைந்துள்ள சாலையோரத்தில் உள்ள மின் கம்பங்கள் மோசமான நிலையில் சேதமடைந்திருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு உடைந்து விழும் நிலையில் இருந்த அனைத்து மின் கம்பங்களையும் அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை அமைத்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகளின் துரித நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.