காஞ்சீபுரம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகர் பகுதியில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. செடிகள் ஆக்கிரமித்தும், புதர்கள் மண்டியும் பாழாகி வருகிறது. பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பூங்காவை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு.