மடிப்பாக்கம் பெரியார் நகர் விரிவு முதல் தெருவில் உள்ள மின்கம்பம் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் உடைந்து கீழே விழுந்துவிடும் என்பதால் அந்த இடத்தை கடந்து செல்வதற்கே மக்கள் அச்சப்படுகிறார்கள். மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரி செய்யுமா?