சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் குடிநீர் வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதனால் நீண்ட தொலைவில் இருந்து வந்து இறங்கக்கூடிய பொதுமக்கள் அதிக விலைக்கு தண்ணீர் பாட்டிலை விலை கொடுத்து வாங்கும் சூழல் அமைகிறது. பூந்தமல்லி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடி நீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.