திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காரனோடை பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் கழிப்பறை இல்லை. இதனால் பொதுமக்கள், பெண்கள், வயதானவர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காரனோடை பஸ் நிலையத்தில் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை.