சோழவரம் ஒன்றியம் காரனோடை ஊராட்சிக்கு உட்பட்ட முனி வேல் நகர் பகுதியில் மின் கம்பம் மிகவும் சிதலமடைந்திருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார்பெட்டியில் சுட்டி காட்டப்பட்டது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கைக்கும் துணை நின்ற 'தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.