சோழவரம் காரனோடை பகுதியில் உள்ள முனிவேல் நகர் பகுதியில் உள்ள மின் கம்பம் மிகவும் சேதமடைந்து காட்சிதருவது தொடர்பாக தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியானது. மின்வாரியத்தின் சீரிய நடவடிக்கையால் தற்போது புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.