ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் காந்தி தெரு வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (55) ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிவேகமாக சாலையில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் சாலையை கடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது. இந்த சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.