பயன்பாட்டில் இல்லாத சுகாதார நிலையம்

Update: 2022-08-04 14:31 GMT

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக துணை சுகாதார நிலையம் ஒன்று திறக்கப்பட்டது. ஆனால் இந்த துணை சுகாதார நிலையம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது. இதன் காரணமாக மேல்நல்லாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதை பயன்படுத்த முடியாமல் மருத்துவ தேவைக்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். மக்கள் சிரமம் போக்க சுகாதார நிலையம் திறக்கப்படுமா?

மேலும் செய்திகள்