திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மகளிர் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலையம் அமைந்துள்ள சாலையில் இருக்கக்கூடிய அனைத்து மின் கம்பங்களும் உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மின்சார வாரியம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமா?