திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் பள்ளிப்பட்டு பஸ் நிலையம் செல்லும் சாலை, நகரி சாலை, சோளிங்கர் சாலை என மூன்று சாலைகள் சந்திக்கும் மும்மனை சாலை சந்திப்பு உள்ளது. இந்த மூன்று சாலைகளிலும் அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகின்றனர். காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் போலீசார் இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பணியாற்றும் படி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.