கூடுதல் பஸ் வசதி வேண்டி விண்ணப்பம்

Update: 2022-08-02 13:44 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்த மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர். மாலையில் 4.10 மணிக்கு பள்ளி விட்டதும் மாணவிகள் இங்குள்ள மூன்று சாலை சந்திப்பில் பஸ்சுக்காக மணிக்கணக்கில் காத்து நிற்கின்றனர். எனவே மாலை நேரத்தில் கூடுதல் பஸ் விட வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்