திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. அதை சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டி 10 நாட்கள் ஆகியும் அது மூடப்படாமலே உள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சி தருகிறது. பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?