திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்.என்.கண்டிகை பஜனைக்கோவில் தெருவில் பாழடைந்த கிணறு புதர் செடிகள் வளர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் பாம்பு, பல்லி, விஷ பூச்சுகள் போன்றவை அதிகமாக நடமாடி வருகின்றன. சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்க வேண்டும்.