திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியிலிருந்து அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் மகாவிஷ்ணு நகர் பகுதி அருகே இருக்கும் பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. உயிரிழப்புகள் ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.