நாய்கள் தொல்லை

Update: 2022-08-01 13:33 GMT


நாகை மாவட்டம் நாகூர் யூசுப்பியா நகரில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்களை விரட்டி சென்று நாய்கள் கடித்துவிடுகின்றன. மேலும் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து, அங்கு வளர்க்கப்படும், கோழி, ஆடுகளை கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகூர்

மேலும் செய்திகள்