சென்னை, சிந்தாதிரிப்பேட்டை நெடுஞ்செழியன் நகர் குடியிருப்பு பகுதிகளில் வாகனங்கள் வேகமாக செல்கிறது. இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகளும், மாணவ-மாணவிகளும் அச்சத்துடனே செல்கின்றனர். சில சமயம் இந்த பகுதியில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.