கிருஷ்ணகிரியில் சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை கோடு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடையை எளிதாக கண்டறிந்து விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடைகளின் மீது வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும், வேகத்தடைக்கு முன்னால் எச்சரிக்கை பலகைகளும் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.