தார்சாலையாக மாற்றியமைக்க வேண்டும்

Update: 2026-07-05 13:12 GMT

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி அமிர்த நகரில் உள்ள மண் சாலை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி, பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல மாதங்களாகப் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்