பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் இருந்து கிழுமத்தூர் குடிகாடு பகுதிக்குச் செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனசே இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.