அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி முதல் இளையபெருமாள்நல்லூர் வரை குறுகிய தூரத்திற்குள் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மருத்துவமனைக்குச் செல்வதில் கடும் காலதாமதமும், சிரமமும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் உள்ள தேவையற்ற வேகத்தடைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.