பர்கூரில் இருந்து காரகுப்பம் செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட நகர பஸ்கள் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தார்சாலை பர்கூரில் இருந்து அரசு மருத்துவமனை வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை தற்போது 1 அடி அளவுக்கு பள்ளமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனனர். எனவே காலதாமதம் இன்றி இந்த தார்சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.